பா ஜ க வுக்கு வருமானவரித்துறை சோதனையில் தொடர்பு இல்லை : தமிழிசை கூறுகிறார்.

சென்னை

சிகலாவின் உறவினர்கள் வீட்டில் நடைபெறும் வருமானவரிச்சோதனைக்கும் பா ஜ கவுக்கும் தொடர்பு இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.

சசிகலாவின் உறவினர்கள், மற்றும் அவரது வக்கீல், உட்பட பலருடைய இல்லங்களிலும் அலுவலகங்களிலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  மொத்தம் 150 இடங்களுக்கு மேல் சோதனை நடத்தப்படுகிறது.   வீடுகள் அலுவலகங்கள் மட்டுமின்றி வாகனங்களும் சோதனை இடப்படுகிறது.

இது குறித்துபல அரசியல் தலைவர்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.   திருமாவளவன், தினகரன் போன்றோர் இது பா ஜ கவின் பழிவாங்கும் நடவடிக்கை என கூறி உள்ளனர்.   இதற்கு பதில் அளித்த பா ஜ க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “இந்த சோதனை முதலீடுகள் பற்றி வந்துள்ள புகாரின் பேரில் நடத்தப்படுகிறது.  மத்திய அரசை விமர்சிப்ப்பதால் நடத்தப்படுவதாக கூறப்படுவது மிகவும் தவறானது.   அவர்கள் மடியில் கனம் இல்லாவிட்டால் பயப்படத் தேவை இல்லை.   இந்த சோதனைகளுக்கும் பா ஜ கவுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது” எனக் கூறி உள்ளார்.