சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பதை ஆதரிக்கும் தமிழிசை !

சென்னை

நாளை சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்படுவதற்கு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை நாளை சட்டப்பேரவையில் சபாநாயகர் திறந்து வைக்க உள்ளார்.   இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.   எதிர்க்கட்சி தலைவர்களான மு க ஸ்டாலின்,  விஜயகாந்த்,  அன்புமணி உள்ளிட்ட பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாஜக வின் தமிழ்நாடு மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன்  இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.   படம் திறப்பது குறித்து அவர், “சட்டப் பேரவையில் ஜெயலலிதாவின் உருவப் படம் திறப்பதில் தவறேதும் இல்லை.   ஜெயலலிதா தமிழகத்தில்  பலமுறை முதல்வராக இருந்தவர்.   அப்படி இருக்க அவர் படத்தை சட்டப்பேரவையில் திறப்பது தவறில்லை”  எனக் கூறி உள்ளார்