தானே ஜவுளிக் கிடங்கில் தீ விபத்து

தானே, பிவாண்டியில் உள்ள காசிம்பூரா அருகே, ஒரு நான்கு மாடிக் கட்டிடத்தில்  ஒரு ஜவுளிக் கிடங்கு உள்ளது. அங்கு ஊழியர்க்ளும் வசித்து வருகின்றனர்.

இன்றுக் காலை 7.30 மணிக்கு, இந்தக் கட்டிடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு முதியவர் காயம் அடைந்தார். அங்கிருந்த மக்கள் மொட்டைமாடிக்கு தஞ்சம் புகுந்தனர்.

bhiwandi-fire-L

தீஅணைப்புப் படையினர் போராடி தீயை அணைத்தனர்.

மின்சாரக் கசிவால், அங்கு தீப்பொறி ஏற்பட்டு, ஜவுளிக் கிடங்கில் இருந்த எண்ணை மற்றும் தறிநூல்கள் பற்றி எரிந்தது எனக் கூறப்படுகின்றது.