Random image

மகாராஷ்டிரா: மும்ப்ராவின் கான் பகுதியில் உள்ள பழைய பொருட்கள் குடோனில் தீ விபத்து…!

தானே:

காராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள   பழைய பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் மும்ப்ரா ((Mumbra)) பகுதியில்  பழைய பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  தீ கொளுந்துவிட்டு மளமளவென எரிந்ததால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி யளித்தது. பழைய பேப்பர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் என அதிகளவில் குவித்து வைக்கப்பட்டிருந்தால், தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து வந்தனர். பலமணி போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைக்கப்பட்டது.  இந்த தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.