தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக தங்கத்தமிழ்ச் செல்வன் நியமனம்! திமுக தலைமைக்கழகம் அறிவிப்பு

சென்னை: தேனி வடக்கு – தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக  திமுக தலைமைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தேனி வடக்கு – தேனி தெற்கு மாவட்டங்கள் வரையறை மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்’  செய்து தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது.

இதுகுறித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக தங்கத்தமிழ்ச் செல்வன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தேனி தெற்கு மாவட்டச் செயலாளராக கம்பன் என்.இராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார்.