தவறான வழிகாட்டுதலால் தனித்து நிற்கிறோம் : தங்க தமிழ் செல்வன்

 

ஆண்டிப்பட்டி

ஆண்டிப்பட்டி தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர்  தங்கத் தமிழ் செல்வன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்..

தேனி மாவட்டம் ஆண்டிப் பட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தங்கத் தமிழ் செல்வன்.   எடப்பாடி பழனிச்சாமியை  விலக்கக் கோரி ஆளுநரிடம் மனு கொடுத்த சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.   இவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இரு நீதிபதிகளும் இரண்டு விதமாக தீர்ப்பளித்தனர்.

இதை ஒட்டி வழக்கை திரும்பப் பெறுவதாக அறிவித்த தங்கத் தமிழ் செல்வன் ஆண்டிப் பட்டியில்  செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது, “எடப்பாடிக்கு எதிராக கொரடா உத்தரவை மீறி வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் மீது கட்சித்தவல் சட்டம் பாயவில்லை.  ஆனால் நாங்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டோம்.  இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தை கூறினார்கள்.   நீதிமன்றம் கேலிக்கூத்தாக உள்ளது.

தற்போது சட்டமன்ற உறுப்பினர் இல்லாததால் ஒரு வருடமாக ஆண்டிப்பட்டி தொகுதிக்கு எந்த ஒரு நலத்திட்டமும் நடைபெறவில்லை.   அதனால் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் தேவை என்பதால் நான் வழக்கை திரும்பப் பெற முடிவெடுத்துள்ளேன்.  இனி எங்களின் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறும்

தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுதி மக்கள் நலம் பெறுவார்கள்.  நாங்கள் தவறான வழி காட்டுதலல் தனித்து விடப்பட்டுள்ளோம்.  டிடிவி தினகரன் எங்களை தனித்தனியாக முடிவு எடுத்துக் கொள்ளுமாறு கூறி விட்டார்.   என்னை பற்றி வரும் வதந்திகள் தவறானவ.  நான் எடப்பாடி பழனிச்சாமியிடம் அமைச்சர் பதவி கேட்கவில்லை.  எப்போதும் அவருடன் சேர மாட்டேன்” என அறிவித்துள்ளார்.