சென்னை:

முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், அமமுக கொள்கை பரப்பு செயலாளருமான தங்கத்தமிழ் செல்வன்  தனது ஆதரவாளர்களுடன் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவருக்கு எதிராக குரல் எழுப்பிய தங்கத்தமிழ் செல்வன், மீண்டும் அதிமுகவில் சேர ஓபிஎஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைத்துக்கொண்டார்.

டிடிவிக்கு ஆதரவாக செயல்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்கத்தமிழ்செல்வன், சமீபத்தில் டிடிவியுடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மீண்டும் அதிமுகவிற்கே செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அங்கும்  ஈபிஎஸ், ஓபிஎஸ் என்ற இரட்டை தலைமை காரணமாக சலசலப்பு நிலவி வரும் சூழலில் இன்று திமுகவில் இணைந்து உள்ளார். ஏற்கனவே அமமுகவில் இருந்து விலகிய செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்த நிலையில், தற்போது தங்கத்தமிழ்செல்வனும் திமுகவில் இணைந்துள்ளார்.

தங்கத்தமிழ்செல்வன் காரில் திமுக கொடி பொருத்தப்படும் காட்சி