தஞ்சை, அரவக்குறிச்சி.. ஜூன் 13 அன்று தேர்தல்

மிழக சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது ஒத்திவைக்கப்பட்ட தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளின் தேர்தல் வரும் ஜூன் 13 அன்று நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 16-ந்தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது முடிந்தது. அ.தி.மு.க. 134 தொகுதிகளை பிடித்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்து இருக்கிறது.  தி.மு.க. கூட்டணி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 98 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது.
இந்த நிலையில், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் அதிகம் பணம் பட்டுவாடா செய்த புகாரில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர்  தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இத் தொகுதிகளுக்கு வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
download (2)
இதற்கிடையே தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் உட்பட சிலரால் வழக்குகள் தொடுககப்பட்டன.  இந்த  வழக்கு விசாரணை  நடைபெற்ற போது,தஞ்சை,அரவக்குறிச்சியில் 23-தேதி தேர்தல் நடைபெறாது என்றும், ஆலோசனைக்கு பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.   உடனடியாக நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுதார்.
இந்த நிலையில்  வரும் ஜூன் 13 ஆம் தேதி தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை தேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: aravakkurichi, election, election 2016, june 13, Thanjavur, அரவக்குறிச்சி, ஜூன் 13, தஞ்சாவூர், தேர்தல், தேர்தல் 2016
-=-