டெல்லி:

ந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாக்க, டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற  வாக்களித்த டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக, அரசியல் சாணக்கியர் என கூறப்படும், தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் டிவிட் பதிவிட்டு உள்ளார்.

தலைநகர் டெல்லியில் தேசிய கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக எழுந்துள்ளது   அரவிந்த்கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி,  3வது முறையாக வரலாறு காணாத வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சிக்கு அரசியல் சாணக்கியர் பிரசாந்த் கிஷோர் ஆலோசகராக இருந்து தேர் பணியாற்றினார்.

இந்த நிலையில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் சூழல் உள்ளது. எதிர்க்கட்சியான பாஜக 8 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் எந்தத் தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை.  ஆம் ஆத்மி பெரும் வெற்றி பெரும் நிலையில் உள்ளது. இதையடுத்து ஆம் ஆத்மி பெற்ற வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாக்க எழுந்து நின்று உதவிய டெல்லிக்கு நன்றி! என்று பிரபல அரசியல் ஆய்வாளர்  பிரசாந்த் கிஷோர் பெருமிதம் தெரிவித்து உள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பணியாற்றிய பிரசாந்த் கிஷோர், அங்கு ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கு மாபெரும் வெற்றியை பெற வைத்து ஆட்சி பிடிக்க வைத்தார். அதுபோல ஏற்கனவே  கடந்த 2012-ம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின்போதும், 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சியைப் பிடிக்க கிஷோர் பணியாற்றினார்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளக் கட்சியைச் சேர்ந்தவரான பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாஷ்த் கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.