மகள் சவுந்தர்யா விசாகன் திருமணத்திற்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி: ரஜினிகாந்த்

டிகர் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா- விசாகன் திருமணம் நேற்று  சென்னை பட்டினம்பாக்கம்  லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

காலையில் திருமணமும் மாலையில் வரவேற்பு நிகழ்ச்சியும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த திருமணத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட அமைச்சர்கள் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்பட   பல்வேறு கட்சித் தலைவர்கள், திரையுலகத்தினர் என ஏராளமானோர் வந்திருந்து வாழ்த்தினர்.

இந்த நிலையில், திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்து வாழ்த்திய முதல்வர் எடப்பாடி உள்பட  அனைவருக்கும் நன்றி தெரிவித்து உள்ளார் ரஜினிகாந்த்.

அவர் வெளியிட்டுள்ள நன்றி அறிவிப்பில், என் மகள் சவுந்தர்யா, மணமகன் விசாகன் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்திய மரியாதைக்குரிய மாண்புமிகு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முகேஷ் அம்பானி குடும்பத்தினர், திருநாவுக்கரசர், அமர்நாத், கமல்ஹாசன் மற்றும் நண்பர்கள், உறவினர்கள், திரையுலக பிரமுகர்கள், ஊடக நண்பர்கள், காவல்துறை நண்பர்கள், திருமண விழாவுக்கு வருகை தந்து வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஜினிகாந்த்.