ஸ்ரீஹரிகோட்டா:

நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேட்டர் நிலவில் இறங்கும்போது தகவல் துண்டிக்கப் பட்ட நிலையில், அதை மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளன. இதைத்தொடர்ந்து, தங்களுடன் துணை நின்ற வர்களுக்கு நன்றி தெரிவித்து இஸ்ரோ உருக்கமான டிவிட் பதிவிட்டு உள்ளது.

அத்துடன் உலகெங்கிலும் உள்ள இந்தியர்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளால் இஸ்ரோ ஊக்குவிக்கப்படுகிறது என்றும் தெரிவித்து உள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவுக்கு அனுப்பிய சந்திராயன்2 விண்கலம் நிலவை சென்றடைந்த நிலையில், நிலவில் கால்பதிக்க இருந்த விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வந்தன. இஸ்ரோவுக்கு ஆதரவாக நாசாவும் களமிறங்கியது.

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள 14 நாட்கள் மட்டுமே  இருந்த நிலையில், அதை தொடர்புகொள்ள  எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி பெறாத நிலையில் விக்ரம் லேண்டரை கிட்டதட்ட இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் இதனை ஒரு தோல்வியாக கருதாமல் இஸ்ரோவுக்கு கோடிக்கணக்கான இந்திய மக்கள் ஆதரவு தெரிவித்ததற்கு இஸ்ரோ நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பதிவிட்டுள்ள இஸ்ரோ, , தங்கள் இழப்பிலும் துணை நின்ற இந்திய மக்களின் ஆதரவுக்கு நன்றி
என்றும், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளால் உந்தப்பட்டு நாம் தொடர்ந்து முன்னேறுவோம் என்றும் இஸ்ரோ பதிவு செய்துள்ளது.

இருப்பினும் இன்னும் நான்கு நாட்கள் இருப்பதால் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள கடைசி நிமிடம் வரை இஸ்ரோ விஞ்ஞானிகள் போராடுவார்கள் என்பது குறிபிடத்தக்கது.