கருணாநிதியை சந்தித்த மோடிக்கு நன்றி! மு.க.அழகிரி

சென்னை,

ப்பா, அம்மா-வை பார்த்துவிட்டுப்போன மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் கருணாநிதியின் மகனான மு.க.அழகிரி.

இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அவர் மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவார் என கூறப்படுகிறது.

நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, கோபாலபுரம் கருணாநிதி இல்லம் வந்து, உடல் நலக்குறைவு காரணமாக கோபாலபுரம் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.

தொடர்ந்து கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாவையும் சந்தித்த மோடி அவரிடமும் நலம் விசாரித்தார்.

இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், விமரசனங்களையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, தனது தந்தையையும், தாயையும் பார்த்து நலம் விசாரித்துச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம்  தொலைபேசி வாயிலாக பேசிய அழகிரி, பிரதமர் மோடிக்கு  மிகுந்த நன்றி  தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

மத்திய அமைச்சர் பொன்னாரும்  இதை பிரதமரிடம் தெரிவிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இதன் காரணமாக, அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த  அழகிரி மீண்டும் தீவிர அரசியலில் இறங்கலாம் என கூறப்படுகிறது.