எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழக அரசிற்கும், நீதிமன்றத்திற்கு நன்றி! ஐஜி சங்கர்

நெல்லை:

லகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழக அரசிற்கும், நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிப்பதாக சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், காவல்துறையினரால் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு மரணம் அடைந்தனர். இந்த விவகாரம் உலகம்  முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், . இது குறித்து மதுரை உயர்நீதி மன்றத்தின் அதிரடி நடவடிக்கை காரணமாக, தற்போது  சிபிசிஐடி சங்கர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டில் சிபிசிஐடி ஐஜி சங்கர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

12 குழுக்களாக பிரிந்து சிபிசிஐடி காவல்துறையினர் நேற்று சாத்தான்குளத்தில் அனைத்து தரப்பினரிடமும்  விசாரணை நடத்தியனர். அப்போது அவர்களிடம் ஏராளமான ஆவணங்கள், வீடியோ ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளார், துணைஆய்வாளர், காவலர்கள் என மொத்தம் காவல்துறையைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். முதல் தகவல் அறிக்கையும், கொலை வழக்கமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சிபிசிஐடி ஐஜி, சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்ந்து  விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சப்இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழக அரசிற்கும், நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றும்  ஐஜி சங்கர் கூறியுள்ளார்.