டெல்லி:

தாய் நாட்டிற்காக சேவையாற்றி வரும் மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்கு, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நன்றி தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இரவுபகல் பாராது மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள்,  மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் என பல தரப்பினரும் பணியாற்றி வருகின்றனர்.

தாய்நாட்டிற்காக சேவையாற்றி வரும் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக முன்னாள் காங்கிரஸ் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி  கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,

நாடு முழுவதும் ஆஷா,  அங்கன்வாடி, ஏஎன்எம் (துணை செவிலியர்கள்) ஊழியர்கள் தங்களது உயிரைக்கூட அர்ப்பணித்து, துணிவோடு கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தத்தில் முன்னணி யில் இருந்து தங்கள் கடமையாற்றி வருகின்றனர்.

தலைசிறந்த தேசப்பற்று என்பது தாய் நாட்டிற்கு தேவையான நேரத்தில் துணை நிற்பதுதான். ஆஷா,  அங்கன்வாடி, ஏஎன்எம் பணியாளர்கள்தான் உண்மையான தேசபக்தர்கள், பேசப்படாத நபர்கள். வெளிச்சத்துக்கு வராமல் இருந்தாலும், அயராது தங்கள் உழைப்பை வழங்கி வருகிறார் கள். இந்த கடுமையான நேரத்திற்கு மத்தியில் நம் சமுதாயத்தை காக்க போராடி வருகிறார்கள்.

வைரஸை விட மிகப்பெரும் ஆபத்தாய் பொய்யான தகவல்களும், அச்சமும் சூழ்ந்த சமுதாயத்தில் வாழ்கிறோம். பணியாளர்களின் தலையாய பணியாக கொரோனா வைரஸின் ஆபத்தை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். மேலும் அது பரவும் வீதம் பற்றியும் எடுத்துக்கூற வேண்டும்.

நம் நாட்டினர் அனைவரும், அவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களின் குடும்பத்தின ருக்கும், தனிப்பட்ட அவர்களின் தியாககங்களுக்கா நன்றிக்கடன் பட்டு இருக்கிறோம்.

இந்த நெருக்கடியாக காலக்ட்டம் நிறைவடைந்ததும், அவர்களின் உயர்வான சேவையும், அந்த துறையின் ஆணிவேர்களில் மாற்றத்தையும், அவர்கள் பணிபுரியும் சூழலையும் மாற்றி அமைக்கும்.

தாய் நாட்டிற்காக தங்களின் மேலான சேவையை செய்து வரும் ஆஷா, அங்கன்வாடி, ஏஎம்என் துணை செவிலியர்கள் என அர்ததுறையின் ஒவ்வொரு நபருக்கும் எனது வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நோய்தொற்றெனும் கடினமான காலக்கட்டத்தில் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்பதற்கு நான் வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.