கொரோனா ஊரடங்கால் 12 நாட்களில் இடித்து அகற்றப்பட்ட 100ஆண்டு பழமை வாய்ந்த யானைக்கவுனி பாலம்…

சென்னை:
மிழகத்தின் தலைநகர் சென்னையில் அமைந்திருந்த பழமைவாய்ந்த பாலங்களில் ஒன்றான  யானைக்கவுனி மேம்பாலம் சேதம் அடைந்த காரணத்தால் கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது.
தற்போது அந்த இடத்தில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கும் நோக்கில் 12 நாட்களில் அநத பழைய பாலம் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டுஉள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த பாலத்தின் கீழ் ரெயில்கள் இயக்கப்படாத நிலையில், பாலத்தை இடிக்கும்படி விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது.
தினசரி நூற்றுக்கணக்கான ரயில்கள் அந்த வழியாகசென்று, வந்துகொண்டிருந்ததால், பாலத்தை இடிக்கும் பணி தடைபட்டு வந்த நிலையில், தற்போது, அந்த பாலத்தை இடிக்கும் பணிக்கு கொரோனா துணைபுரிந்துள்ளது… இதற்காக நாம் கொரோனாவுக்கு நன்றி சொல்லலாம்.‘
100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான யானை கவுனி பாலம் வால்டாக்ஸ் சாலை மற்றும் ராஜா முத்தையா சாலைகளை இணைக்கும் யானை கவுனி பாலசாலையில் அமைந்துள்ளது. இநத் பாலம்   ரயில்வே துறையைச் சாா்ந்ததாகும்.
இந்தப் பாலத்தின் இருபுறமும் உள்ள அணுகுசாலை பகுதி மட்டும் சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படுகிறது.
இந்தப் பாலம் மிகவும் பழுடைந்த காரணத்தால் கன ரக மற்றும் இலகு ரக வாகனங்கள் செல்வதற்கு கடந்த 2016ம் ஆண்டு மூடப்பட்டது.
சமீபத்தில் யானைக்கவுனி பாலத்தை இடித்து விட்டு, புதிய பாலம் கட்ட ரயில்வே துறை பணிகளை மேற்கொண்டது.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து புதிய பாலம் கட்டும் பணி தொடங்கும் நோக்கில் அந்த பழைய காலம் 12 நாட்களில் இடித்து அகற்றப்பட்டது.
புதிதாக கட்டப்பட உள்ள  பாலம்  150 மீட்டர் நீளத்துக்கு கட்டப்பட உள்ளது. இதன்காரணமாக கூடுதல் ரயில் தடம் அமைய வாய்ப்புள்ளதோடு, தடம் கிடைக்காமல், காத்திருக்கும் ரயில்கள் சீராக இயங்க வாய்ப்பு ஏற்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பழைய பாலம் 50 மீட்டர் நீளம் அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.