டில்லி:

டந்த ஆட்சியின்போது, தனக்கு அமைச்சர் பதவி வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு  நன்றி என முன்னாள் வெளி விவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டிவிட் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவை நேற்று  பதவி ஏற்ற நிலையில, கடந்த அமைச்சரவையில் தனக்கு பதவி வழங்கியதற்கு தற்போது நன்றி தெரிவித்து சுஷ்மா டிவிட் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்ற நிலையில், மீண்டும் மோடி தலைமையிலானஅமைச்சரவை நேற்று பதவி ஏற்றது.  புதிய அமைச்சரவையில், பழைய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, சுஷ்மா உள்பட  பலருக்கு பதவி வழங்கப்படவில்லை. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

அருண்ஜெட்லி உடல்நிலை காரணமாக தனக்கு பதவி வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்து விட்ட நிலையில், சுஷ்மாவுக்கு பதவி வழங்கப்படாததும் கேள்விக்குறியானது.

இந்த நிலையில், தனக்கு கடந்த அமைச்சரவையின்போது,   முக்கியமான வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வழங்கியதற்காகவும் மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை வழங்கிய தற்காகவும்  பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

மேலும், நமது அரசு மிகச்சிறந்த முறையில் வெற்றிநடை போட இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனின் அதிக அக்கறை கொண்ட சுஷ்மா, உதவும் மனப்பான்மை கொண்டவர். வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே சுஷ்மாவுக்கு தனி மரியாதை உள்ள நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாது அதிருப்தியை ஏற்படுத்தி இருதுந்தது. இந்த நிலையில் சுஷ்மாவின் டிவிட் பாஜகவில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.