“துயரமான சூழ்நிலையில்  ஆதரவாக இருந்த ஊடகங்களுக்கு நன்றி!” : சிறை மீண்ட பியூஸ் மனுஷ் உருக்கம்

சேலம்:

சேலம்  மத்திய சிறையில் இருந்து  இரண்டு வாரங்களுக்கு பிறகு சூழலியல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார். சிறையில் காவலர்களால் தாம் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், துயரமான சூழ்நிலையில் ஆதரவாக இருந்த ஊடகங்களுக்கு நன்றி எனவும்  பியூஸ் மனுஷ்  நெகிழ்வுடன் தெரிவித்தார்.

சேலம் முள்ளுவாடி ரயில்வே மேம்பால கட்டுமானப் பணியை நிலம் கையகப்படுத்திய பிறகே தொடங்க வேண்டும் என்று கூறி பணிகளை தடுத்ததாக சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ்  உள்ளிட்ட மூவர்  கடந்த 8ம் தேதி கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

1

, கைதான மூவரில் கார்த்தி, முத்துச் செல்வம் இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மருத்துவ காரணங்கள் அடிப்படையில் பியூஸ் மனுஷுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சேலம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிதமன்றம் பியூஸ் மானுஷ்-க்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர் இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் மானுஷ், சிறையில் 30 காவலர்களால் கண்மூடித்தனமாக  தான் தாக்கப்பட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.
சிறைத்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கூறிய பியூஸ் மானுஷ், தமக்கு நேர்ந்த கொடுமை வேறு யாருக்கும் நேரக் கூடாது என்றும் கூறினார். மேலும், துயரமான சூழ்நிலைியல் தனக்கு ஆதரவாக இருந்த ஊடகங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.