மீரா குமாருக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி! திருநாவுக்கரசர்

சென்னை,

னாதிபதி தேர்தலில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள மீரா குமாருக்கு வாக்களித்த சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் மீரா குமாருக்கு வாக்களித்த திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்கு காங்கிரஸ் சார்பாக நன்றி தெரிவிப்பதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

மேலும்,  எங்கள் அணிக்கு பிற கட்சிகளின்  ஓட்டுகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும், இதன் காரணமாக  குடியரசுத் தலைவர் தேர்தலில் மீரா குமார் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக நம்புகிறோம் எனவும் கூறனார்.

மேலும் நடிகர் குறித்து அமைச்சர்களின்  தரக்குறைவாக விமர்சித்ததிற்கு கண்டனம் தெரிவித்துள்ள திருநாவுக்கரசர்,  கமலை பற்றி அமைச்சர்களின் பேச்சு ஜனநாயக விரோதமனா பேச்சு என குற்றம்சாட்டியுள்ளார்.

நடிகர்கள் எப்படி அரசியல் பேசலாம் என்று கேட்பது நியாயம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.