தர்மதுரை படத்துக்கு ஆசிய விஷன் விருதுகள்!

விஜய்சேதுபதி - தமன்னா
விஜய்சேதுபதி – தமன்னா

மீபத்தில் வெளியாக பெரும் வெற்றி பெற்றது “தர்மதுரை” திரைப்படம்.. ஸ்டூடியோ 9 ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியான இது, “தரமான திரைப்டம்” என்றும் பாராட்டப்பட்டது. ‘தர்மதுரை’ படம் பெரும் வெற்றி பெற்றது. மக்களால் மட்டுமல்ல அரசியல் கட்சித் தலைவர்களாலும் பாராட்டு பெற்ற இப்படத்துக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்து வருகின்றன.

சீனு ராமசாமி
சீனு ராமசாமி

இந்த படத்துக்கு மேலும் ஒரு அங்கீகாரம்..  ஆசிய விஷன் விருதுகளில் நான்கை வென்றிருக்கிறது தர்மதுரை.

சிறந்த படம்’ தர்மதுரை’- தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்
சிறந்த இயக்குநர் – சீனு ராமசாமி
சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி
சிறந்த நடிகை -தமன்னா என நான்கு விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளது.

இதற்கான விழா, வரும் நவம்பர் 18ம் தேதி, ஷார்ஜா கிரிக்கேட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

‘தர்மதுரை’க் கான சிறந்த தயாரிப்பாளர் விருதை பெறுகிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ். அதோடு, ‘தாரை தப்பட்டை’ மற்றும் ‘மருது’ படங்களில் நடித்ததற்காக சிறந்த வில்லன் விருதையும் இவர் பெறுகிறார்.

இது குறித்து தனது மகிழ்ச்சையை வெளிப்படுத்திய சுரேஷ், “. ‘தர்மதுரை’ படம் நல்ல கதையம்சம் உள்ள படம் மட்டுமல்ல, நல்ல சமூகக் கருத்துகள் சொன்ன படமும் கூட.

 

சுரேஷ்
சுரேஷ்

அந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பில்புதிய பரிமாணம் எடுத்திருந்ததை பலரும் கு றிப்பிட்டுப் பாராட்டினார்கள். மக்கா கலங்குதப்பா பாடல் உலகம் முழுக்க கலக்கியது . நான் முதலில் தயாரித்த’ சலீம்’ படமும் சமுதாயக் கருத்து சொன்ன படம்தான். ‘தர்மதுரை ‘ அவ்வகையில் அடுத்த படம்.” என்கிறார் உற்சாகமாக.

உற்சாகம் தொடரட்டும்!

 

கார்ட்டூன் கேலரி