‘மாஸ்டர்’ ட்ராக் லிஸ்டில் ஒரு சிறிய மாற்றம்….!

இன்று விஜய்யின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

மாஸ்டருக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் இருக்கிறது

இன்று காலை ட்ராக் லிஸ்ட் வெளியிடப்பட்டது. அது இணையத்தில் வைரலானது.

அதில் ஒரு பாடலுக்கு “தறுதல கதறுனா”என பெயர் வைக்கப்பட்டிருந்தது. அது நடிகர் தல அஜித்தை தரக்குறைவாக விமர்சிக்கவே வைக்கப்பட்டது என சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அந்த ட்ராக் லிஸ்டை நீக்கிவிட்டு தற்போது புதிய ட்ராக் லிஸ்டை வெளியிட்டுள்ளனர். அதில் “தறுதல கதறுனா” என்பதற்கு பதில் “போனா போகட்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.

மாஸ்டர் படத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஒரு பாடல் பாடியுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இரண்டு பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் “பொளக்கட்டும் பற பற” என்கிற பாடலை பாடியுள்ளார்.