சென்னை,

விஞ்ஞான வளர்ச்சியின் பயனாக தற்போது நாம் உபயோகப்படும் மொபைலில் உள்ள முன்பக்க காமிராவின் உதவியால் செல்பி எனப்படும் போட்டோ எடுத்து அதை பார்த்து மகிழ்வதும், சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதும் அதிகரித்து வருகிறது.

அதுபோல  தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் செல்பி எடுத்த படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விஜயகாந்தும் செல்பிக்கு அடிமையாகி விட்டதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் செல்பி மோகத்தால் ஏராளமானோர் மரணத்தை தழுவி உள்ள நிலையில், செல்பி எடுக்க பல இடங்களில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஒரு சூழலில், விஜயகாந்த் செல்பி எடுப்பது போன்ற படம் வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

விஜயகாந்தின் செல்பி படம் குறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள்  தெரிவித்துள்ள பலர், ஏற்கனவே மதுபோதைக்கு அடிமையாக,  மனநிலை சரியில்லாதவர் போல எதேதோ உளறி கொட்டும் விஜயகாந்த், தற்போது செல்பி எடுப்பது போன்ற படத்தை வெளியிட்டு, அவரை மேலும் தரம் தாழ்த்தி உள்ளதாக விமர்சித்துள்ளனர்.