அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 31-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு

--

சென்னை:

மிழ்நாடு முழுவதும் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை வரும் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இதையடுத்து, மாணவர்கள் தங்களுக்கான சேர்க்கையை வரும் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதிக்குள்ளாக சம்மந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அசல் சான்றிதழ்களுடன் நேரில் சென்று உறுதி செய்ய மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாணவர்கள், தங்கள் சேர்க்கையை உறுதி செய்ய செப்டம்பர் 4-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், வரும் 31-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும் உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம், கல்விக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பழைய கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.