லக்னோ :

கொரோனா வைரஸ் இளவட்டங்களோட ‘இம்யூனிட்டி’ முன்னாடி கைகட்டி நிக்குதோ இல்லையோ நம்ம பசங்களுக்கு கால்கட்டு போட ரொம்பவே உபயோகமா இருக்கு. வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கற கால்கட்டு இல்லீங்க, இது நிஜமான ‘கால்கட்டு’, அட ஆமாங்க… ஆமாம்..

உத்தர பிரதேசத்துல ஒரு அம்மா தன் பையன மளிகை சாமான் கடைக்கு போய்ட்டுவாடானு அனுப்பினா, இது தான் சான்ஸ் “மெல்ல திறந்தது கதவு”ன்னு நினைச்சு கிளம்பின பையன், சைக்கிள் கேப்-ல ஒரு பொண்ணை கல்யாணம் பன்னி கூட்டிட்டுவந்து, “அம்மா கோதுமை வாங்க போன இடத்துல கோதுமை மட்டும் வாங்கலை வீட்டுவேலைக்கு உனக்கு உதவியா மருமகளையும் கூட்டிட்டு வந்திருக்கேன்னு” சொல்லியிருக்கான்.

பையன கொண்டுபோய் போலீஸ் ஸ்டேஷன்ல நிறுத்தின அந்த மம்மி, இவங்கள நான் வீட்டுக்குள்ள விடமாட்டேன் இவனுக்கு கல்யாணம் பன்னிவெச்ச புரோகிதர்கிட்ட இருந்து ஒரு லெட்டர் வாங்கிட்டு வரச்சொல்லுங்கனு பஞ்சாயத்து வைக்க.

ஏற்கனவே, “2021 பிப்ரவரில பொறக்க போற குழந்தைக்கு ‘பர்த் சர்டிபிகேட்’ எப்படி கொடுக்கறதுங்கற பஞ்சாயத்தே இன்னும் முடியலே”, நீ என்னப்பா கல்யாணம் பண்ணதுக்கு அத்தாட்சி கேக்கறே, எல்லாம் ஊரடங்கு முடிஞ்சதுக்கப்புறம் பாத்துக்கலாம்னு, சொல்லிட்டாராம் அந்த விவரமான புரோகிதர்.

அப்புறம் என்ன, ஊரடங்கு முடிஞ்சுதான் பஞ்சாயத்துனு சொல்லிடிச்சு இருந்தாலும் அந்த அம்மா ‘மைண்ட் வாய்ஸ்ல’, ஆன்லைன் டெலிவரி பன்ற கம்பெனி எல்லாம் கருத்தடை மாத்திரை, கருத்தடை சாதனம், பிரெகனன்சி டெஸ்ட் கிட் விற்பனை தான் அமோகமா நடக்குதுனு சொல்றத எல்லாம் யோசிச்சி, ஊரையே அடக்கிடலாம் போல இருக்கு, வீட்ல இருக்க இளவட்டங்களை எப்படி அடக்குறதுனு பீல் பண்ணிக்கிட்டு இருக்கு.

அவங்க என்னவேனும்னாலும் பீல் பண்ணட்டும், மாஸ்க் போட்டு சுத்திகிட்டு இருந்த பெண்ணை முகத்தை பார்க்காம “வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதேனு” பாட்டு பாடி செலக்ட் பண்ணியிருப்பானோ , அவனவன் பிரச்சனை அவனவனுக்கு.