அந்த வீடியோ, அப்போலோவில் எடுக்கப்படவில்லை.. அப்போலோ நிர்வாகம் மறுப்பு?

ப்போலோ மருத்துவமனையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்டதாக, டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வீடியோ ஒன்றை சிறிது நேரத்துக்கு முன் வெளியிட்டார்.

ஜெயலலிதா மரணம் குறித்து தவறான தகவல்களை சிலர் பரப்பி வருவதால் அதை முறியடிக்கும் வகையில் இந்த வீடியோவை வெளியிடுவதாக அவர் தெரிவித்தார்.

அந்த வீடியோவில் ஜெயலலிதா பழச்சாறு அருந்துவது போல காட்சி இருக்கிறது.

இந்த நிலையில், குறிப்பிட்ட அந்த வீடியோ அப்பல்லோ மருத்துவமனையில் எடுக்கப்பட்டது அல்ல என்று மருத்துவமனை நிர்வாகம்  மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

https://www.youtube.com/watch?v=OwiGBottn2M&feature=youtu.be