உலக கோப்பை கால்பந்து போட்டியில் காயமடைந்த இளம் வீரர்

உலக கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை சேர்ந்த கிளியன் பப்பே காயமடைந்ததாக கூறியுள்ள்ளார். 19 வயதே நிரம்பிய இளம் வீரரான கிளியன் பப்பே ஃபிரான்ஸ் அணியில் ஸ்ட்ரைக்கராக உலக கோப்பை போட்டியில் பங்கேற்றார். உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்ற இளம் வீரர் என்ற பெருமையையும் பப்பே பெற்றார்.

mbappe1

அரையிறுதி போட்டியில் பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றிக் கொண்ட போதும், இறுதி போட்டியில் குரோஷியாவை 4-2 என்ற கோல்கள் கணக்கில் வென்றபோதும் பப்பே அடித்த கோல்கள் பாராட்டும் படியாக இருந்தது.

உலக கோப்பை கால்பந்து போட்டி முடிந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற பப்பே, ”உலக கோப்பை போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டியில் எனது முதுகெலும்பில் உள்ள மூன்று எலும்புகள் காயமடைந்தன, இதனை மைதானத்தில் போட்டியாளார்கள் மறைத்தனர்” என்று கூறினார்.

இருப்பினும் உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற இளம் வீரர் என்ற விருதினை பப்பே தட்டி சென்றார். இதற்கு முன்பு 1958ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் பீலே இளம் வீரராக பங்கேற்றார். அப்போது அவர் இரண்டு கோல்களை அடித்திருந்தது சாதனையாக இருந்தது.

நெய்மர், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிக், ரஃபேல் வரானே உள்ளிட்ட வீரர்களுக்கு இணையாக கோல்டன் பந்தை தன்னால் பெற முடியும் என்று பப்பே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.