கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணம் அடைந்த 20 ராணுவ வீரர்கள் யார் யார்? பெயர் விவரம்…

டெல்லி:

டாக் இந்திய சீன எல்லைப்பகதியான கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே நடைபெற்ற மோதலில்  வீரமரணம் அடைந்த 20 ராணுவ வீரர்கள் யார் யார்? என்ற பெயர் பட்டியலை இந்திய ராணுவம் வெளியிட்டு உள்ளது.

இந்திய – சீன எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் 15ந்தேதி இரவு  சீன ராணுவம் அத்துமீறி  நடத்திய தாக்குதலில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரி, 2 படைவீரர்கள் மரணமடைந்த நிலையில், 17 வீரர்கள் படுகாயமடைந்திருந்தனர். படுகாயமடைந்த 17 வீரர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த நிலையில், பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.  மேலும் 4 வீரர்கள் தீவிர சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசத்தின் இறையாண்மையை காப்பதில் உறுதிபூண்டுள்ளதாகவும்,  இந்திய – சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதட்டத்தை தவிர்க்க, பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வீரமரணம் அடைந்த 20 ராணுவ வீரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

1. சந்தோஷ் பாபு
2. சுனில் குமார்
3. நந்துராம்
4. சி.கே.பிரதான்
5. ராஜேஷ் ஓரான்
6. கே.கே.ஓஜா
7. கணேஷ் ராம்
8. கணேஷ் ஹஸ்தா
9. சந்தன் குமார்
10. தீபக் சிங்
11. அமான் குமார்
12. குந்தன்  குமார்
13. சத்னம் சிங்
14. மன்தீப் சிங்
15. ஜெய் கிஷோர் சிங்
16. பிபுல்  ராய்
17. குர்தேஜ் சிங்
18. அங்குஷ்
19. குர்வீந்தர் சிங்
20. கே.பழனி (தமிழ்நாடு)