ஆசிய விளையாட்டுப் போட்டி: குத்துச்சண்டையில் ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி இந்திய வீரர் அமித் தங்கம் வென்றார்

ஜகர்தா:

ந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று 14வது நாளாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இன்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் 22 வயதேயான  இந்திய வீரர் அமித் பங்கல், ஒலிம்பிக் போட்டி சாம்பியனும் உலக  நம்பர்1 வீரருமான ஹசன்பாய் டஸ்மயடாவோ-வை வீத்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

இன்று நடைபெற்ற 40கிலோ எடை பிரிவினருக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கல், 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற வீரரான ஹசன்பாயை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இன்றைய போட்டிகளான மகளிர் அணி ஸ்குவாஷ் இறுதி போட்டியிலும் இந்தியாவுக்கு மேலும் பல பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.l