உருவாகிறது ‘மிருகம்’ படத்தின் 2-ம் பாகம்…..!

2007-ம் ஆண்டு சாமி இயக்கத்தில் வெளியான படம் ‘மிருகம்’.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. அதே வேளையில் சர்ச்சையும் உருவானது.

தற்போது 13 ஆண்டுகள் கழித்து ‘மிருகம் 2’ உருவாகவுள்ளது. இதில் நாயகனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்கவுள்ளார்.

அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் முடிவானவுடன் ‘மிருகம் 2’ படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.