ஸ்ரீநகர்:

மீபத்தில் நடைபெற்ற  ஜம்மு காஷ்மீர் பேருந்து நிலைய குண்டு வெடிப்பு தொடர்பாக பள்ளி மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். இதுபோன்ற குண்டு வெடிப்புகளுக்கு சிறுவர்களை பயங்கரவாதிகள் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

கடந்த மாதம் (பிப்ரவரி-2019)  14ந்தேதி நடைபெற்ற  புல்வாமா பயங்கரவாத தாக்குதலும் பிறகும், காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மக்கள் கூட்டத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஜம்மு பேருந்து நிலையத்தில் கையெறிக் குண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் சுமார் 30க்கும் பேர் காயம் அடைந்த தாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதியை சுற்றி வளைத்த காவல்துறை யினர், காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திய இந்த குண்டுவெடிப்பு குறித்து காவல்துறை யினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உடைய 15வயது கொண்ட 9ம்வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். நக்ரோடா காவல்துறை சோதனைச்சாவடியில் அந்த பள்ளி மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவனிடம் நடத்திய விசாரணையில்,  தெற்கு காஷ்மீரின் குல்காம் பகுதியை சேர்ந்த அந்த சிறுவன், தனது மதிய உணவு பெட்டியில், வெடிகுண்டை மறைத்து வைத்து எடுத்துச் சென்று வீசியது தெரிய வந்துள்ளது.

குண்டு வீச சொன்னது யார் என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து, தானே யுடியூப் வீடியோ சேனல் மூலம் குண்டு வீசுவது குறித்து கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளான். இது காவல் துறையினரை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

ஆனால், அந்த மாணவன் மர்ம நபர் ஒருவருடன் காரில் வந்து, வெடிகுண்டை வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. அந்த மர்ம நபர் யார்? பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.