டில்லி:

நீட் தேர்வு வயது உச்ச வரம்பு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் டில்லி உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே இந்த  வழக்கை விசாரிக்க  உச்சநீதி மன்றம், தடை விதிக்க முடியாது என்று  தள்ளுபடி செய்த நிலையில், டில்லி உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

நீட் தேர்வுக்கான வயது உச்சவரம்பு குறித்து சிபிஎஸ்இ கல்வி வாரியம் கடந்த மாதம் 22ந்தேதி ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில், பொதுப் பிரிவினரின் வயது  25 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவில் 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே  பலர் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதை விசாரித்த உச்சநீதி மன்றம், சி.பி.எஸ்.இ.யின் முடிவில் தலையிட முடியாது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும், இதுபோன்ற வழக்குகளுக்கு உயர்நீதி மன்றங்களை நாடலாம் என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில், சிபிஎஸ்இ-ன் வயது உச்சவரம்பு குறித்த அறிவிப்புக்கு தடை விதிக்கக்கோரி மனுதாரர்கள் டில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதி மன்றம், சிபிஎஸ்இ அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.