அதிமுக, திமுக.வை தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும்: கமல்ஹாசன் ஆவேசம்

சேலம்:

மிழக அரசியலில் இருந்து, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை அகற்ற வேண்டும் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான  கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தற்போது சேலம் பகுதிகளில் மக்களை சந்தித்து வரும் கமல்ஹாசன் உரையாற்றும் போது, தமிழகத்தை திராவிட கட்சிகள் சீரழித்து உள்ளதாகவும், திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் தமிழகத்தை விட்டே விரட்ட வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மக்களுடனான பயணம் என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரில் சந்தித்து  வருகிறார். ஏற்கனவே தென் மாவட்டங்களான கன்னியாகுமாரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டஙகளுக்கு சுற்றுப்பபயணம் செய்தவர், பின்னர்  திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

அப்போது கல்லூரிகளுக்கு சென்று மாணவ-மாணவிகளை சந்தித்து உரையாடினார். மேலும், அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளையும் சந்தித்து உரையாடி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது 3 நாட்கள் சுற்றுப்பயணமாக, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மக்களை சந்தித்து வருகிறார்.  சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன், ‘மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இருக்கிறது என்று கூறியவர்,  அனைத்து கட்சிகளும் கல்லூரிகளில் அரசியல் பேசினாலும் தவறில்லை என்றார்.

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதன் மூலம் அங்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு ஆதரவாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.

மேலும், தற்போதைய  திமுக – காங்கிரஸ் கூட்டணி உடையக் கூடிய வாய்ப்பு  இருப்பதாக கூறியவர், அவ்வாறு உடைந்தால், அந்த இடத்தை மக்கள் நீதி மய்யம் கைப்பற்றும் என்றும், காங்கிரசுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்கும் என்று கூறியவர், ஒருபோதும், திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்காது என்றம் தெரிவித்தார்.

தமிழகத்தை ஆட்சி செய்து வந்த திராவிட கட்சிகள் சீரழித்து விட்டதாக கூறியவர், திமுக மற்றும் திமுகவை தமிழக அரசியலில் இருந்து அகற்ற மக்கள் நீதி மய்யம் பாடுபடும் என்றும் கூறினார்.

நடிகர் கமல்ஹாசனின் பேச்சு திமுக, அதிமுக கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: The AIADMK and DMK should remove from the Tamilnadu: Says Kamal Hassan, அதிமுக, திமுக.வை தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும்: கமல்ஹாசன் ஆவேசம்
-=-