கனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்… விளாத்திக்குளத்தில் பரபரப்பு

விளாத்திக்குளம்:

தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு  திமுக வேட்பாளராக கனிமொழி அறிவிக்கப்பட்டு உள்ளார். அந்த பாராளுமன்ற தொகுதிக்குட் பட்ட விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் சின்னப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், இன்று தொகுதிக்கு வந்த சின்னப்பனுக்கு, விளாத்திக்குளம் பேருந்து நிலை யத்தில் அதிமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பிரசாரத்தில்  ஈடுபட்டவர், தன்னை 50ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று கூறியவர்,. தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு புரட்சி தலைவர் மற்றும் அம்மா ஆசியோடும், பாரத பிரதமராக இருந்து பாரத நாட்டு காவலனாக இருந்து கட்டிகாக்கின்ற நரேந்திர மோடி அவர்களின் ஆசி பெற்ற நமது கூட்டணி வேட்பாளரான அன்புச்சகோதரி கனிமொழி  என்று கூறினார்.

இது கூட்டத்தில் இருந்த அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு பாஜக வேட்பாளராக தமிழிசை பெயர் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது பெயரை சொல்வதற்கு பதிலாக கனிமொழி என்று அதிமுக வேட்பாளர் சின்னப்பன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே விளாத்திக்குளம் முன்னாள் எம்எல்ஏ, சின்னப்பனுக்கு எதிரான நிலையில் இருந்து வரும் நிலையில், தற்போது சின்னப்பன் கனிமொழி என மக்களிடையே பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி