சென்னை:

திருவாரூர் இடைதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து தேர்வு செய்ய இன்றுமாலை அதிமுக ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.  நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் இடைத்தேர்தல் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், போட்டியிட விரும்புபவர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள  தலைமை அலுவலகத்தில் மனுதாக்கல் செய்து வேட்புமனு பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவித்திருந்தது.‘

இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட 52 பேர் விருப்ப மனுக்கள் கொடுத்துள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து  ஆய்வு செய்து யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று முடிவு செய்ய அதிமுக ஆட்சிமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெறும் என  அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் அறிவித்திருந்தனர்.

இந்தநிலையில், ஆட்சி மன்றக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் நாளை நடைபெறும் என்றும் அதிமுக அறிவித்து உள்ளது.

அதிமுக ஆட்சிமன்றக்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழ்மகன் உசேன், பா.வளர்மதி, எம்.பி.க்கள் பி.வேணுகோபால், ஜஸ்டின் செல்வராஜ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிமுக ஆட்சிமன்றக்குழு கூட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படத்தி உள்ளது.