அதிமுக எம்எல்ஏ முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும்… ஸ்டாலின்

சென்னை:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏ முழுமையாக குணமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என விரும்புகிறேன் என்று திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் டிவிட் போட்டுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ, கொரோனா ஊரடங்கின்போது, பொதுமக்களுக்கு நிவாரணப் பணிகள் வழங்கி வந்த நிலையில், தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் எம்எல்ஏ பழனி விரைவில் குணமடைந்து மக்கள் பணி ஆற்ற வர வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,  கொரோனா தொற்று காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருபெரும்புதூர் அதிமுக MLA திரு.கே.பழனி அவர்கள் முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்!

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி