அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடியாது: ஜெயக்குமார் சொல்கிறார்

சென்னை:
அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முயற்சி எடுக்கப்படும் என டிடிவி தினகரன் கூறியிருந்த நிலையில், அதை  கட்சியாக பதிவு செய்ய முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தேர்தலில் ஒரே சின்னம் வேண்டு கோரிக்கை வைத்து டிடிவி தினகரன் தொடரப்பட்ட வழக்கில், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே ஒரே சின்னம் வழங்க முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து விட்ட நிலையில், தனது அமமுக என்ற அமைப்பை கட்சியாக பதிவு செய்ய இருப்பதாக டிடிவி தினகரன் கூறினார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய 6 சதவீதம் வாக்குகள் தேவை. ஆனால்  அவ்வளவு வாக்கு அவர்களுக்கு தேர்தலில் அது கிடைக்காது என்றார்.

அமமுகவிற்கு ஒன்று அல்லது 2 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்க வாய்ப்பிருப்பதால்,   அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கடைசி வரை குழுவாக மட்டும் செயல்படவே  முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி