இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு:  அமெரிக்க பாடகர் பாப் டிலன் பெறுகிறார்

ந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை , அமெரிக்க பாடகரும், பாடலாசிரியருமான, பாப் டிலன் பெறுகிறார்.  இந்த அறிவிப்பை ஸ்டாக்ஹோமில் உள்ள ஸ்வீடிஷ் அக்காடெமி அறிவித்தது.

புகழ்பெற்ற அமெரிக்க ராக் மற்றும் நாட்டுப்புற இசைப் பாடகரான, பாப் டிலன், இசையுலகில் பெரும் ஆளுமையாக விளங்குகிறார்.

_91895304_tv000126333

அவரது ` தெ டைம்ஸ் , தே ஆர் எ சேஞ்சிங்,  ப்லோயிங் இன் தெ விண்ட், லைக் எ ரோலிங் ஸ்டோன் போன்ற பாடல்கள் 1960களின் மிகவும் பிரபலமாக விளங்கிய பாடல்களாகும். அவை போருக்கெதிரான மற்றும் மனித உரிமைகள் இயக்கத்துக்கு ஆதரவான முழக்கமாகவும் ஒலித்தன.

“அமெரிக்க பாடல் பாரம்பரியத்துக்குள் புதிய கவித்துவ வடிவங்களை உருவாக்கியவர் பாப் டிலன்” என்று  நோபல் கமிட்டி புகழ்ந்துரைத்திருக்கிறது.

1941ல் மின்னெசோட்டா மாநிலத்தில் பிறந்த பாப் டிலனின் இயற்பெயர் ராபர்ட் ஆலன் ஸிம்மர்மான் என்பதாகும். சிறு வயதில் காபி ஷாப்களில் பாடியதன் மூலம் தனது இசை வாழ்வைத் தொடங்கினார்.

அவருடைய மிகப் பிரபலமான படைப்புகள்  அனைத்தும் 1960களில் இயற்றப்பட்டவையாகும். அந்த பாடல்கள் அனைத்தும்,  அமெரிக்காவின் அந்த காலகட்டப் பிரச்சனைகளை வெளிப்படையாக கூறியவை.

 

கார்ட்டூன் கேலரி