Random image

“வாதம் சரிதான்… “: எச்.ராஜாவுக்கு வக்காலத்து வாங்கும் தமிழிசை

சென்னை:

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போலீசாருடன் வாதம் செய்தது சரி ஆனால் அவரது வார்த்தை பிரயோகம்தான்  தவறு என்று பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜாவுக்கு வக்காலத்து வாங்கிவருகிறார். இது பொதுமக்களிடையே பாஜக மீதான அதிருப்தியை அதிகரித்து வருகிறது.

சென்னையில் இந்து முன்னனி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்கள் அவரிடம் எச்.ராஜாவின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த தமிழிசை சவுந்தரராஜன்,  புதுக்கோட்டை அருகே மெய்யபுரத்தில் குறிப்பிட்ட வழியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்கு போலீஸார் தடைவிதித்த போது போலீசாரிடம் எச்.ராஜா வாக்கு வாதத்தில் ஈடுபட்டது சரிதான்…  ஆனால், அவரது வார்த்தை பிரயோகம் தவறு என்று கூறினார்.

மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து அந்த பகுதியில் இருந்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்,  தமிழிசையிடம் கேள்வி எழுப்பினார். அவரை  பாஜகவினர்  சரமாரியாக தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்து 4 வாரத்திற்குள் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.