குஜராத்தில் பீகார் மாநிலத்தவர் மீதான தாக்குதல்: தாகூர்சேனா அமைப்பு காரணமா?

அகமதாபாத்:

குஜராத் மாநிலதில் பீகார் மாநிலத்தவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கு நடைபெற்ற தாக்குதல்களுக்கு தாகூர் சேனா என்ற அமைப்பே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த மாதம் (செப்டம்பர்) 28ந்தேதி  14மாத சிறுமி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டது தொடர்பாகப் பீகார் மாநிலத் தொழிலாளியான  ரவீந்திர சாகு  என்பரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவ  அந்த பகுதியில் உள்ள பீங்கான் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இந்த சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,   இதுகுறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. அதையடுத்து குஜராத்தின் பல மாவட்டங்களில், வெளி மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் சம்பவம் நடந்தேறியது.

தலைநகர்  அகமதாபாத், காந்திநகர், மேசானா உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பீகார், உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர்கள் மீது குஜராத்திகள் தொடர் தாக்குதல்கள் நடத்தி வந்தனர்.

இதற்கிடையில், , குஜராத் மாநிலத்தில்  மற்ற மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களை  பணியமர்த்தப் படக்கூடாது என்று சாஸ்திரி தாக்கர் சேனா அமைப்பு அறிவித்து பிரச்சினையை மேலும் சூடாக்கியது.

இந்த தாகூர் சேனா கும்பல் அக்டோபர் 2 ம் தேதி மெட்னானா மாவட்டத்தின் வதேரா  நகரத்திற்கு அருகே ஒரு தொழிற்சாலையைத் தாக்கி அங்கு பணியில் இருந்த 2 வெளிமாநில தொழிலார்களை அடித்து விரட்டியது. இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குஜராத் மாநில அரசு மீது கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சியினர் பாஜ அரசு மீது கடுமயாக குற்றம் சாட்டினர்.

குஜராத் தாக்குதல்கள் காரணமாக  பீகார், உ.பி.போன்ற மாநிலங்களை சேர்ந்த  வெளி மாநில தொழிலாளர் கள் குஜராத்தில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறினர். குஜராத் மாநிலத்தில் இருந்து சுமார் 20 ஆயிரத் துக்கும் மேற்பட்ட பீகார் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்துக்கு திரும்பினர்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்னர்  குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது,  குற்றவாளியைக் கடுமையாகத் தண்டிக்கலாம் என்றும், ஒட்டுமொத்தமாக அனைவரையும் தாக்குவது முறையல்ல என்றும்  தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து குஜராத்தில் மாநில காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வன்முறையை கட்டுப்படுத்தி யது. பிழைப்புக்காக குஜராத்திற்கு வந்தவர்கள் என தெரிந்ததும், குடிபெயர்ந்தவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து,  6 மாவட்டங்களில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சுமார் 450 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் அகமது படேல் பேசுகையில், “யாரோ ஒன்று, இரண்டு பேர் செய்த குற்றத்திற்காக அனைவரையும் தாக்கக்கூடாது. அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டும். மாநில அரசு உடனடியாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும், தீர்வை காண வேண்டும். அப்பாவி மக்களும் இந்தியர்கள்தான். ஒரு மாநிலத்தில் நடந்தால் மற்றொரு மாநிலத்திலும் இது எதிரொலிக்கும்… இதற்கு  மும்பை ஒரு உதாரணம் என்று கூறிருந்தார்.

குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் நடவடிக்கையை எடுக்கும் என்று மாநில அமைச்சர் கூறியுள்ளார். இந்த விவகாரங்களில் மாநில பாஜகவும், காங்கிரசும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பீகார் தொழிலாளர்கள் மீதான தாக்குலுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், சத்திரிய தாகூர் சேனா அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான அல்பேஷ் தாகூர் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

ஆனால், அல்பேஷ் தாகூர் அதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். “இந்த வன்முறை சம்பவம் துரதிர்ஷ்டமானது, நாங்கள் வன்முறைக்கு வாதிடவில்லை, சமாதானத்தைப் பேசினோம். குஜராத்தில் அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளனர், “என்று கூறி உள்ளார்.

இந்த வன்முறை சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

“பிரதமரின் குஜராத் மாநிலத்தில்  வடக்கு இந்தியர்கள் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டு உள்ளனர். ஒருநாள் நீங்கள் உ.பி. மாநிலம் பனாரஸுக்கு  வரவேண்டியது இருக்கும் என்பதை  நினைத்துப் பார்க்க வேண்டும். அடுத்த ஆண்டு பிரதமர் வாக்குகளை பெற பனாரஸ்  பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக மத்திய அரசிடம் குஜராத் உள்துறை அறிக்கையை அளித்துள்ளது. 6 மாவட் டங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் பீகார், உத்தரபிரதேச மக்கள் பயம் காரணமாக அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள்.

இதற்கிடையே குஜராத்திலிருந்து திரும்பி சென்றவர்கள் மீண்டும் வருமாறு மாநில் அரசு அழைப்பு விடுத்துள்ளது. குஜராத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள… இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மாநில அமைச்சர் கூறி உள்ளார்.