ஜெயக்குமார் ஆடியோவை வெளியிட்டது, மாமியார் தான்; மாபியா அல்ல: தங்கத்தமிழ் செல்வன்

குற்றாலம்:

குற்றாலத்தில் முகாமிட்டுள்ள டிடிவி ஆதரவாளர்களில் ஒருவரும், டிடிவியின் வலதுகரமான தங்கத்தமிழ் செல்வன், அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான ஆடியோவை வெளியிட்டது அவரது மாமியார்தான்… மாபியா அல்ல என்ற கூறினார்.

சிபாரிசு கோரி சென்ற இளம்பெண்ணுடன் அமைச்சர் ஜெயக்குமார் பாலியல் ரீதியான தொடர்பு வைத்திருந்ததாகவும், அதன் காரணமாக அந்த பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார்,  “ஆடியோவில் உள்ளது என்னுடைய குரல் அல்ல. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்மீது களங்கம் கற்பித்து வருகின்றனர். சசிகலா கும்பலை நான் கடுமையாக எதிர்ப்பதால், மன்னார்குடி மாஃபியா கும்பல் தான் ஆடியோ மார்ஃபிங் செய்து வெளியிட்டு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி ஆதரவு வெற்றிவேல், அமைச்சர் அந்த பெண்ணுடன் உள்ள தொடர்புக்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக கூறினார்.

இதற்கிடையில் குற்றாலத்தில் முகாமிட்டுள்ள டிடிவி ஆதரவாளரான தங்கத்தமிழ்செல்வன், குரல் என்னுடையது இல்லை என்று கூறும் அமைச்சர்  ஏன் குழந்தை என்னுடையது இல்லை என்று கூற மறுக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், அமைச்சர் மீதான ஆடியோவை வெளியிட்டது, மாபியா கும்பல் இல்லை என்றும், அதை வெளியிட்டது அவரது மாமியார்தான் என்று கூறினார்.

தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் புஷ்கர விழாவில் கலந்துகொள்ளவே குற்றாலம் வந்ததாகவும் தங்கத்தமிழ்செல்வன் கூறினார்.

தாமிரபரணியில் நீராடி மகிழும் டிடிவி ஆதரவாளர்கள்

குற்றாலத்தில் தங்கியிருக்க 18 வந்திருப்பதாக சொல்வது தவறு என்றும்,  புஷ்கர விழா முடி வடைய இருப்பதால், அதில் பங்கேற்கலாம் என்று முடிவு செய்து வந்தோம் என்றும், 2 நாட்கள் குற்றாலத்தில் தங்கி புஷ்கர விழாவில் கலந்து கொண்டு வருவோம். ஆதரவு எம்.எல்.ஏக்கள் பிரபு, கலைச் செல்வன், ரத்தின சபாபதி, கருணாஸ் ஆகிய ஆதரவு எம்.எல்.ஏக்களும் எங்களுடன் வருகிறார்கள். நாங்கள் அனைவரும் நிரபராதிகள். எந்தக் குற்றமும் செய்யவில்லை. எங்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வெளியாகும் என 100 சதவீதம் நம்புகிறோம்” என்றார் தங்க தமிழ்செல்வன்.

குற்றாலத்தில் முகாமிட்டுள்ள டிடிவி ஆதரவாளர்கள், ஏற்கனவே கூவத்தூரில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததுபோல, தற்போது குற்றாலத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி