வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கே: உச்சநீதிமன்றம்

டில்லி:

ச்சநீதி மன்றத்தில் வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதிக்கே உள்ளது என்று உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு கூறி உள்ளது.

தலைமை நீதிபதி மூத்த நீதிபதிகளுக்கு முக்கியமான  வழக்குகளை ஒதுக்குவதில்லை என்று சக நீதிபதிகள் புகார் கூறியதைதொடர்ந்து,  முன்னாள் மத்திய அமைச்சர் சாந்தி பூஷண், வழக்கை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் யாருக்கு என்று கேள்வி எழுப்பிய பொதுநலவழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் உச்சநீதி மன்ற மூத்த நீதிபதிகள் 4 பேர் சேர்ந்து  தலைமை நீதிபதிக்கு எதிராக செய்தி யாளர்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது  உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும்  முறைகேடுகள் பலவற்றை யும் தைரியத்துடன் மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் வெளிக் கொணர்ந்தார்.  மேலும்  வழக்குகள் ஒதுக்கீடு, கொலிஜியம் போன்றவற்றில்  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்தி ருந்தார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்திபூஷன் உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், உச்சநீதி மன்றத்தில் வழக்கு ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்குத்தான் உண்டு என்றும், நீதிபதிகள் அனைவருக்கும் தலைமை நீதிபதிதான் தலைவர். இதில் சர்ச்சை ஏதும் கிடையாது. இது குறித்து  விவாதிக்க வேண்டியது ஒன்றும் இல்லை. மேலும் நீதி மன்ற விவகாரத்தில் பூஷன் மனு தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்து உள்ளது.