பிரமிக்க வைக்கும் “பாகுபலி” சம்பளப் பட்டியல்!

பாகுபலி படத்தில் நடித்தத  பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஆகியோர் உலக அளவில் புகழ் பெற்றுவிட்டனர். அதோடு, இந்த படத்துக்காக சம்பளமும் அள்ளிக்கொடுக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து திரைஉலக வட்டாரத்தில் பேசப்படுவது இதுதான்:

பிரபாஸூக்கு  25 கோடி ரூபாய்க்கு மேல்  சம்பளம்  அளிக்கப்பட்டுள்ளதாம்   படத்தில் பல்வாள் தேவனாக நடித்த ராணா, 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறாராம்.

தேவசேனாவாக நடித்த அனுஷ்காவுக்கு  5 கோடி ரூபாய்,  முதல் பாகத்தில், மகேந்திர பாகுபலியின் காதலியாக நடித்த நடிகை தமன்னாவும்  5 கோடி ரூபாய், சிவகாமியாக நடித்த  ரம்யா கிருஷ்ணன், 2.5 கோடி ரூபாய் அளிக்கப்பட்டதாம்.

கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜ், 2 கோடி ரூபாய் பெற்றாராம்.

இயக்குநர் ராஜமௌலியின் சம்பளம்   25 கோடி ரூபாய் ! மேலும், படத்தின் லாபத்தில் மூன்றில் ஒரு பங்கும் உண்டாம்.