ஆள்துளை கிணற்றில் விழுந்த குழந்தை ஏழு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்பு

புவனேஸ்வரம்:

டிசாவில் ஆள்துளை கிணற்றில் விழுந்த 3வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டார்.

ஓடிசாவில் மூடப்படாத நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் குழந்தை ஒன்று தவறி விழுந்துள்ளது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு குழந்தையை உயிருடன் மீட்டனர்.

ஒடிசா மாநிலம் ஆங்கூல் மாவட்டத்தில் உள்ளது குலாசார் என்ற கிராமம். இந்த பகுதியில் விவசாயத்துக்காக போடப்பட்ட ஆள்துளை கிணறு ஒன்று தண்ணீரில்லாமல் இருந்ததுள்ளது.

சம்பவத்தன்று அந்த கிராமத்தை சேர்ந்த சாகு 3 வயது குழந்தை ஒன்று அந்த கிணற்றுக்குள் விழுந்ததுள்ளது. இதையறிந்த அந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் மீட்க முயற்சி செய்தனர். அதே நேரத்தில் இதுகுறித்து அந்த பகுதி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்துவந்து மீட்பு பணி மேற்கொண்டனர். சுமார் 15 அடி ஆழத்தில் சிக்கியிருந்த பெண் குழந்தையை 7 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

அதையடுத்து அநத் குழந்தை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.

குழந்தையை மீட்ட தீயணைப்பு, மீடபு படையினருக்கும், ஆங்கூல் மாவட்ட நிர்வாகத்திற்கும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பாராட்டு தெரிவி்த்தார்.