நியூயார்க்

நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவுக்கு எடுத்துச் சென்று சந்திரக்கற்களை கொண்டு வந்த பை அமெரிக்காவில் 1.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் விடப்பட்டது,

கடந்த 1969ஆம் வருடம் மனிதன் முதல் முதலாக நிலவில் காலடி வைத்தான்.  அந்த மனிதன் தான் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்.  அவர் நிலவிலிருந்து சில கற்களை ஆய்வுக்காக எடுத்து வந்தார்.  அதற்காக அவர் உபயோகப்படுத்திய பை அவர் திரும்பி வந்ததும், மற்ற பொருட்களைப் போல அல்லாமல் ஒரு மூலையில் வீசப்பட்டது.  அதை பொறுக்கி எடுத்து ஒரு தனியார் மியூசியத்தில் ஒருவர் வைத்தார்.  அந்த மியூசிய ஓனர் பல குற்றங்களின் கீழ் கைது செய்யப்படதால் அந்தப்பை எஃப் பி ஐ மூலமாக ஏலம் விடப்பட்டது.

அதை வாங்கியவர் சிறிது காலம் கழித்து மறு ஏலம் விட்டு அதிகத் தொகைக்கு விற்றார். இது வரை அந்த பை நான்கு முறை ஏலம் விடப்பட்டு, இது ஐந்தாம் முறை ஆகும்.

இதற்கு முன்பு இதே பை $995க்கு ஏலம் எடுக்கப்படது குறிப்பிடத்தக்கது.

தற்போது இதை எடுத்தவர் தன் பெயரை தெரிவிக்க விரும்பவில்லை.