புதுடெல்லி:

இறுதிகட்ட வாக்குப்பதிவின் போது பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏ வீடு அருகே குண்டு வீச்சு நடந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.

மக்களவை தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு என்று நடக்கிறது.

காலை 11 மணி வரை பதிவான இறுதிகட்ட வாக்குப்பதிவு விவரம் வருமாறு:

பீகார் – 18.90%, இமாச்சல் பிரதேசம் – 24.29%, மத்திய பிரதேசம் – 28.40%, பஞ்சாப் – 23.36%, உத்தரபிரதேசம் – 21.89%, மேற்குவங்கம் – 32.15%, ஜார்கண்ட் – 30.33%, சண்டிகர் – 22.30% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எதுவும் இன்று மாலை 6.30 மணிக்கு முன் வெளியிடப்படக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் ராஜேஷ்வரி நகரில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ முனிரத்னா வீட்டின் அருகே குண்டு வெடித்துள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்தில் வெங்கடேஷ் என்பவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூருவில் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.