12நாட்கள் முழு ஊரடங்கில் 2 நாட்கள் மட்டுமே வங்கி இயங்க அனுமதி…

சென்னை:

கொரோனா பரவல் தீவிரம் காரணமாக சென்னை ,செங்கல்பட்டு, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், 12 நாட்கள் முழு ஊரடங்கின்போது,   ஜூன் 29 -ம் தேதி மற்றும் ஜூன் 30-ம் தேதி ஆகிய நாட்களில் 33 சதவீத பணியாளர்களோடு மட்டும் வங்கிகள்  செயல்பட அனுமதிக்கப் படும் எனவும் ஏடிஎம், அது சம்மந்தப்பட்ட வங்கிப்பணி மற்றும் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை. அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முன்கூட்டியே பெற வேண்டும்.

இவ்வாறு தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.