மசாலா விளம்பரப்படத்தில் நடித்ததால் அமிதாப் பச்சனுக்கு டெல்லி வழக்கறிஞர்கள் சங்கம் நோட்டீஸ்

--

வக்கீல் சீருடையுடன் மசாலா விளம்பரப் படத்தில் நடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமிதாப் பச்சனுக்கு டெல்லி வழக்கறிஞர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கறிஞர்களின் தொழில் கண்ணியத்தையும், மாண்பையும் சீர்குலைத்ததாக அமிதாப் பச்சன் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

Delhi-Bar-Council

பிரபல மசாலா நிறுவனத்தின் விளம்பரப் படம் ஒன்றில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். அவர் நடித்த விளம்பரத்தில், “ வழக்கறிஞர்கள் கோர்ட்டில் ஆஜராகி வாதாடும்போது அணியும் கருப்பு அங்கியை அணிந்திருக்கும் அமிதாப் பச்சனுக்கு அவரது உதவியாளர்கள் பலகாரம் தருவது போலவும், அதை வாங்கி சாப்பிடும் அமிதாப் பச்சன் அந்த பலகாரத்தில் சேர்க்கப்பட்டுள்ள மசாலாவின் சுவையையும், நறுமணத்தையும் புகழ்ந்துப் பேசுவது போலவும் தயாரிக்கப்பட்டுள்ள அந்த விளம்பரப் படம் சில செய்தி சேனல்களிலும், யூ டியூபிலும் ஒளிபரப்பாகி வருகிறது “.

இதையடுத்து, டெல்லி வழக்கறிஞர்கள் சங்கத்தின் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, அமிதாப் பச்சன் நடித்த விளம்பரப்படம் தொடர்பாக அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் அமிதாப் பச்சனுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி விளம்பரத்தில் நடித்த அமிதாப் பச்சன், அந்த காட்சியை ஒளிபரப்பிய பிரபல செய்தி சேனல் மற்றும் யூ டியூப் நிர்வாகத்தினருக்கு டெல்லி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், “ விளம்பரத்தின் மூலம் வக்கீல் தொழிலின் கண்ணியத்தையும் மேன்மையையும் சீர்குலைத்ததற்காக டெல்லி வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்திடம் பத்து நாட்களுக்குள் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். இனி இதுபோன்ற விளம்பரங்கள் தயாரிக்கப்படாது எனவும் உறுதியளிக்க வேண்டும்.

மேலும், சர்ச்சைக்குரிய அந்த விளம்பரப்படம் காட்டப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் “ என குறிப்பிடப்பட்டுள்ளது.

You may have missed