Random image

நாட்டின் சிறந்த நடிகர் விருது குமாரசாமிக்கே: கர்நாடக பாஜக நக்கல் டுவிட்

பெங்களூரு:

நாட்டின் சிறந்த நடிகர் விருது கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கே என்று கர்நாடக பாஜக நக்கல் செய்து  டுவிட்டரில் பதிவிட்டு உள்ளது.

கர்நாடக முதல்வராக காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி செய்துவருகிறார் மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர் எச்.டி. குமாரசாமி. இவர் சமீபத்தில்,  பெங்களூரு சேஷாத்ரிபுரத்தில் உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் தலைமை அலு வலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில பேசிய முதல்வர் குமாரசாமி,  “நீங்கள் அனைவரும் நான் முதல்வரா னதற்கு மகிழ்ச்சி அடைந்தீர்கள், ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை” என்றும்,  “நான் என்ன பாவம் செய்தேன். பதவியேற்று  2 மாதங்கள் கூட ஆகவில்லை. ஆட்சி செய்வதற்கு கால அவகாசம் கொடுக்காமல் என்னை நிந்திப்பது ஏன்? உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினர். கடவுள் அனுமதிக்கும் வரை பதவியில் இருந்து மக்களுக்கு நல்லது செய்வேன் என குமாரசாமி கண்ணீருடன் கூறியது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியையும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆனால், கர்நாடக முதல்வர் கண்ணீர்விட்டு அழுததை மாநில பாஜக நக்கல் செய்து டுவிட்டரில் பதிவிட்டு உள்ளது.

அதில்,  “தங்களது நடிப்புத் திறமையால் மக்களை கவர்ந்த  சிறந்த நடிகர்களை நமது நாடு உருவாக்கியுள்ளது. அதேபோல குடிமக்களை தனது நடிப்புத் திறமையால் ஏமாற்றும் சிறந்த நடிகர் குமாரசாமியையும் நாம் பெற்றுள்ளோம்” என பதிவிட்டுள்ளது.

இது தற்போது கர்நாடகாவில் பரபரப்பாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.