Random image

8 வழிச்சாலைக்கு எதிராக மாபெரும் போராட்டம்: டிடிவி தினகரன்

சென்னை:

சென்னை சேலம் இடையே அமையவுள்ள 8 வழி எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தை எதிர்த்து மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அமமுக கழக தலைவரும், ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவுமான டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,  நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஜெ பெற்ற வெற்றியை போல தமிழகத்தின் 37 தொகுதிகளையும் கைப்பற்றும்  என்றும், அது தொடர்பாக பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய டிடிவி, சென்னை சேலம் 8 வழிச்சாலை தேவையற்றது. அதை விடுத்து,  தமிழகத்தில் இருக்கும் சாலைகளை எல்லாம் அகலப்படுத்தலாம் என்று கூறிய தினகரன், 200 ஏக்கர் நிலத்தை அழித்து 8 வழிச்சாலை கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

மத்திய மாநில அரசின் இந்த திட்டத்துக்கு எதிராக  விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் சிலை கடத்தல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த டிடிவி,   சிலை கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில்,  பொன்.மாணிக்கவேல் திறமையாக செயல்பட்டு வருகிறார்,  நேர்மையான அதிகாரியான அவர் சுதந்திரமாக செயல்படுவதற்கான அதிகாரத்தை நீதிமன்றம்  கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.  சிலை கடத்தல் விவகாரத்தில் இன்னும் யார் யாரெல்லாம் சிக்கப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்போம் என்றார்.

எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3வது நீதிபதியின் விசாரணை முடிவு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு,   18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் நல்ல முடிவு வரும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

You may have missed