சென்னை:

ச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககாத மத்திய அரசை கண்டித்தும், உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் சென்னை மெரினா கடற்கரையில் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்து உள்ளார்.

கடந்த ஆண்டு சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் உலக முழுவதும் பெரும் பரவியது.  அதைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் பலர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மெரினாவில் எந்தவித போராட்டமும் நடத்த அனுமதிக்கக்கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

இதன் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் எந்தவித ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ நடத்த காவல்துறை அனுமதிப்பதில்லை. தற்போது காவிரி பிரச்சினைக்காக மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்  காவிரிக்காக சென்னை மெரினாவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேலும்,  ஐபிஎல் போட்டியை தமிழகத்தில் நடத்த விடாமல் விரட்ட போராடிய அனைவருக்கும் அவர் நன்றி என்றும், ஐபிஎல் போட்டி சென்னையில் வேண்டாம் என்றபோதும் போட்டியை நடத்தியே தீருவோம் என  ஐபிஎல் நிர்வாகம் கூறியதால், மைதானத்தில்  பாம்பு விடுவோம் என்றேன் என்றும் அவர் கூறினார்.

காவிரிக்காக மெரினாவில் மீண்டும் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.