டெல்லி:

லைநகர் டெல்லியில் பாஜக மீண்டும் தோற்கடிக்கப்பட்டு இருப்பது, அந்த கட்சியின் இந்துவா கொள்கை மற்றும் மக்களிடையே பரப்பிய  விஷமப் பிரசாரம்தான் காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவோ, வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில், பாஜகவின் வாய்ச்சவடால் காரணமாகவே  மாபெரும் தோல்வியை சந்தித்து உள்ளது.  பாஜக அதன் தொடர்புடைய இயக்கங்களான ஆர்எஸ்எஸ் மற்றும் பல இந்துத்துவா அமைப்புகள், உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்றவர்களின் மக்கள் விரோத பேச்சு, இந்துத்துவா ஆதரவான மிரட்டல் போன்றவைக்கு டெல்லி மக்கள் சாவுமணி அடித்து உள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி உள்பட பல தலைவர்கள், இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள், ஆம்ஆத்மி கட்சிமீது விஷமத்தனமான, பொய்யான பிரசாரங்களை முன்வைத்தனர். ஆனால் இறுதியில் தோல்வியடைந்தது உள்ளது.

இதில் முக்கியமான நிகழ்வு என்றால், பாராளுமன்றத்தில் பட்ஜெட் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அதற்கு பதில் சொல்ல வேண்டிய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன், அதை விடுத்து தேர்தல் பிரசாரத்தில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்குசேகரித்துக் கொண்டிருந்தார். அதுபோல மற்றொரு தலைவர்,  இந்த தேர்தல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் என்று மற்றொரு பாஜக தலைவர் எச்சரித்தார்.

மேலும் ஒரு பாஜக எம்.பி., ஷாஹீன் பாக் போராட்டம் குறித்து விமர்சிக்கையில், போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள எதிர்ப்பாளர்கள் இந்து வட்டாரங்களில் உள்ள சகோதரிகள் மற்றும் மகள்களை “பாலியல் பலாத்காரம்” செய்வார்கள் பகிர் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். முஸ்லிம்கள்  துரோகிகள் மற்றும் கற்பழிப்பாளர்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

பாஜகவின் மனநிலையில், பெரும்பாலான இந்துக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ஆழ்ந்த விரோதப் போக்கைக் கொண்டிருக்கிறார்கள் என்ற தவறான எண்ணத்திலேயே தங்களது இந்துத்துவா கருத்துக்களை வலியுறுத்தி வந்தது. ஆனால், அதை தேர்தல் முடிவுகள் தவறு என நிரூபித்து உள்ளது.

பாஜகவின் மட்டரகமான பிரசாரத்திற்கு டெல்லி மக்கள்  பதிலடி கொடுத்துள்ளனர். பாஜகவின் அத்துமீறிய அநாகரிக பேச்சுக்கு இந்து மக்களிடையே வரவேற்பு இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்து உள்ளன.

சுமார் 80 சதவிகிதம் இந்துக்கள் உள்ள டெல்லியில், அங்குள்ள மக்கள் யாரும் பாஜகவின் இந்துத்துவா போக்கையோ, இதுபோன்ற அநாகரிக பேச்சையோ ரசிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலிலும், பாஜக இதுபோன்ற இந்துத்துவா கொள்கையையே தூக்கிப்பிடித்து வாக்கு சேகரித்தது. ஆனால், அங்குள்ள வாக்காளர்கள், பாஜகவின் வகுப்புவாத பிரச்சாரங்களை நிராகரித்து அதை அதிகாரத்திலிருந்து வெளியேற்றி காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க வைத்துள்ளனர்.

அதுபோல அரியானா மற்றும் குஜராத் மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும், முந்தைய அளவுக்கு வெற்றியை பெற முடியவில்லை என்பதை டெல்லி தேர்தல் சுட்டிக்காட்டி உள்ளது.

புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி….